தஞ்சை மாவட்ட AIBSNLPWA
கூட்டத்தின் தொகுப்பு.
இன்று 14 9 2019 இரண்டாம் சனிக்கிழமை தஞ்சை மாவட்டத்தின் அகில இந்திய
பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தின் மாதாந்திர பொதுக்கூட்டம் தஞ்சை மேரிஸ்
கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை பத்து
முப்பது மணிக்கு தொடங்கி இனிதாக நடைபெற்றது. 150க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியரும் கலந்துகொண்டு
விழாவினை சிறப்பித்தனர். தோழர் மதுரை ராஜேந்திரன் மாவட்ட தலைவர் தலைமை ஏற்க
தோழர்கள் பிரான்சிஸ் சேவியர், ஃபிரின்ஸ், ஏகே தனபாலன், முறையே மாநில அமைப்புச் செயலர், மாவட்ட செயல் தலைவர், மாவட்ட கௌரவ தலைவர்
முன்னிலையில் தோழர் வீ.சாமிநாதன் மாவட்ட செயலர் முன்னின்று கூட்டத்தினை
நடத்தினார். முதலில் தமிழ் தாய் வாழ்த்து இசைத்திட தோழர் ஐயனார் இணைச் செயலர்
வரவேற்புரை ஆற்றினார்.
அடுத்த நிகழ்வாக பெண் பொறியாளர் தோழியர்
சுபஸ்ரீ சென்னை பள்ளிக்கரணையில் சாலையில்
அமைக்கப்பட்டிருந்த பேனரால் தாக்கப்பட்டு
உயிர்நீத்த தோழியருக்கு அஞ்சலி செலுத்தும்
முகத்தான் ஒரு நிமிடம் மௌனம் காத்து இது போன்ற நிகழ்வுகளை இனி நடைபெறாமல் இருக்க
பொதுமக்களாகிய நாமும் அரசாங்கமும் ஒரு சேர சேர்ந்து செயலாற்ற வேண்டிய
பொறுப்புக்களையும் விளக்கி தலைவர் தனது உரையை நிறைவு செய்தார்.
தோழர்கள் பிரின்ஸ் பிரான்சிஸ் சேவியர் கே
சந்தானகோபாலன் இருதயராஜ் சிவி தங்கையன் புருஷோத்தமன் மற்றும் மாவட்ட செயலர்
கூட்டத்தில் உரையாற்றினார்கள். இன்றைய காலகட்டத்தில் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப
நாம் நமது ஓய்வுஊதிய மாற்றம் மற்றும் தொடர்ந்து எம் ஆர் எஸ் பெறுவது நலிவுற்ற
பிஎஸ்என்எல் நன்முறையில் இயங்க தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். மாவட்ட
செயலர் பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிடவும் வருகின்ற மாநில
செயற்குழு கூட்டத்தில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியும் தனது உரையில்
குறிப்பிட்டு நிறைவு செய்தார். அடுத்ததாக சென்ற மாதம் பணி ஓய்வு பெற்ற தோழர்களின்
மணி விழாவும் இந்த மாதம் பிறந்தநாள் வாய்க்கப்பெற்ற தோழர் தோழியரின் பிறந்தநாள்
விழாவும் ஐம்பதாவது திருமண நாள் விழா கண்ட தோழரின் திருமணநாள் விழாவும் சந்தன மாலை
அணிவிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு வாழ்த்து கோஷங்களுடன் இனிதே நடைபெற்றது. நன்றி
உரையினை தோழர் ராஜேஷ் நிகழ்த்திட மதிய இன்சுவை விருந்துடன் காலை நிகழ்வுகள்
நிறைவேறியது.
மதியம் இரண்டு முப்பது மணிக்கு மாவட்ட
செயற்குழுக்கூட்டம் ஆரம்பமாகி மாலை 5 மணி அளவில் முடிவுற்றது.
35க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும்
கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அனைத்து கருத்துக்களையும்
ஏற்றுக்கொண்டு முடிவாக ஒருமித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நமது மாவட்ட
சங்கத்தின் அமைப்பு நிலையை பலப்படுத்தவும் பிரதம மந்திரிவெள்ள நிவாரண நீதிக்கு
நன்கொடை வழங்கிடவும் வருகின்ற மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு நமது
ஓய்வு ஊதிய மாற்றத்திற்கான நமது மாவட்ட சங்கத்தின் ஒத்துழைப்பை மாவட்டம் மாநில
அகில இந்திய சங்கத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க அளித்திடவும் ஒருமனதாக
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாழ்க வளர்க அகில இந்திய பி எஸ் என் எல்
ஓய்வூதியர் நல சங்கம்.
No comments:
Post a Comment