Tuesday 19 March 2019


14 3 2019 வியாழக்கிழமை   முப்பெரும் விழா  உலக மகளிர் தின விழா 2019 , மத்திய, மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா  BSNL  ஊழியர்கள் மற்றும் ஓய்வு ஊதியர் குடும்ப விழா வெகுவிமர்சியாக தஞ்சை திரு இருதய மறைமாவட்ட பேராலய மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 550க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு சிறப்பித்தது சிறப்பு அம்சமாக அமைந்தது. இந்த முப்பெரும் விழாவில் மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் பி கங்காதர ராவ் பொதுச்செயலர் AIBSNLPWA  பெங்களூரு ,தோழர்  D கோபாலகிருஷ்ணன் துணைத்தலைவர் AIBSNLPWA  துணை தலைவர், தோழர் V. ராமாராவ் மாநிலத் தலைவர் தோழர் E. கனகராஜ் மாநில அமைப்புச் செயலர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு வந்திருந்து முப்பெரும் விழா வினை சிறப்பாக முன்நின்று நடத்த திரு C.V. வினோத் ITS முதன்மை பொது மேலாளர் BSNL  தஞ்சை சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழா சிறக்க பங்களிப்பு செய்தார்கள்.

உலக மகளிர் தின விழா விழா:  தோழர் எஸ் பிரின்ஸ் மாவட்ட செயல் தலைவர் மற்றும் தோழியர் மல்லிகா சுகுமாரன் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு இருவரும் கூட்டாக தலைமை வகிக்க தோழர் வி.சாமிநாதன் மாவட்ட செயலர் வரவேற்புரை நிகழ்த்த விழா கலை கட்டியது.

திரு C.V.வினோத்ITS முதன்மை பொது மேலாளர் BSNL தஞ்சை சிறப்பானதொரு மகளிர் தின விழா உரையாற்றினார்கள். தனது உரையில் இன்றைய மகளிருக்கான சிறப்புச் செய்திகளை சிறப்பாக தொடுத்து உரையாற்றி நிறைவு செய்தார். பிறகு தோழர் P கங்காதர ராவ் பொதுச்செயலர் மற்றும் தோழர் D. கோபாலகிருஷ்ணன் துணைத் தலைவர் மத்திய சங்கம் அவர்கள் இருவருக்கும் சிறப்பு மரியாதை செலுத்தும் முகத்தான் ஆள் உயர ரோஜா மாலை பொன்னாடை தஞ்சை பெரிய கோவில் உருவத்துடன் கூடிய சிறப்பு கண்ணாடி பேழை,ஷில்டு மற்றும் தஞ்சை தலையாட்டி பொம்மை அசோகா அல்வா முந்திரிப்பருப்பு ஆகிய பரிசுப் பொருட்கள் கொடுத்து சிறப்பிக்கப்பட்டனர். முதன்மை பொது மேலாளர் மற்றும் AGM.  BSNL  அவர்கள் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

 தோழர் P. கங்காதர ராவ் பொதுச்செயலர் நீண்டதொரு மகளிர் தின சிறப்பு பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினார்கள். பிறகு தோழர் DG  துணைத் தலைவர் சிறந்த ஒரு மகளிர் தின சிறப்பு உரையினை பழைய காலம் தொட்டு இன்றைய தேதி வரையில் உள்ள எல்லா செய்திகளையும் தொகுத்து வழங்கி அனைவரது பாராட்டினையும் பெற்றார். தற்பொழுது நமது சங்கத்தில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் பற்றியும் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்ற பென்ஷன் ரிவிசன் பற்றியும் இன்றைய நிலை பற்றியும் மிகவும் தெளிவாக உரையாற்றினார்கள். முன்னதாக தோழர் வி ராமாராவ் மாநிலத் தலைவர் சிறந்ததொரு வாழ்த்து செய்தியினை வழங்கினார்கள். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் நமது தஞ்சை மாவட்ட செயல்பாட்டினை அனைவருமே சிலாகித்து உரை ஆற்றியதோடு அல்லாமல் இதை மற்ற மாநில மத்திய சங்கங்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறியது தான்

 தோழர் E. கனகராஜ் மாநில அமைப்புச் செயலர் திருநெல்வேலி அவர்களும் இதே கருத்தினை வலியுறுத்தி உரையாற்றினார்கள்.
மதியம் இரண்டு 45 மணி அளவிலே உலக மகளிர் தின கருத்தரங்கம் தோழியர் தங்கம் சேவியர் தலைமையேற்க தோழியர் எம் பத்மினி மாவட்ட இணைச் செயலர் துவக்க உரை நிகழ்த்த தோழியர் லைலா பானு தோழர் அய்யனார் தோழர் C.V. தங்கயன் ஆகியோர் முறையே உழைக்கும் மகளிர், பெண்ணிய சிந்தனைகள் ,பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற தலைப்பிலே மகளிர் தின கருத்தரங்கத்தில் சிறப்பானதொரு உரையாற்றினார்கள். தோழர் கே. சீனு பொருளாளர் நன்றி கூறி உரையாற்றினார். இத்துடன் விழா இனிதே முடிவுற்றது.
நன்றி ,வணக்கம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
வி. சாமிநாதன்,
மாவட்ட செயலர்,
தஞ்சை.


1 comment:

  1. ஒரு புகைப் படத்தில் கூட மாநிலச் செயலர் தோழர் ஆர்.வி. இல்லையே.

    ReplyDelete