Saturday, 28 April 2018

AIBSNLPWA சங்கத்தின் அனைத்திந்திய தலைவர் தோழர் ராமன்குட்டி அவர்களின் 28-04-2018 வலைப்பதிவின் தமிழாக்கம்.
சென்னையில் வெற்றிகரமாக முடிவடைந்த மத்திய செயற்குழு கூட்டத்திற்குப்பின் 21-04-2018 அன்று நம் அடுத்துவரும் அனைத்திந்திய மாநாடு குறித்த ஒரு வலைப்பதிவை வெளியிட்டிருந்தேன். மேலும் நம் பென்ஷனர் பத்திரிக்காவில் ஒரு பக்க செய்தியாக வெளியிட இருந்தேன்.ஆனால் அதில் சில பாயிண்டுகள் தெளிவாக இல்லை. நம் தோழர்கள் சில சந்தேகங்களை எழுப்பினர். ஆகவே இந்த வலைப்பதிவு மேலும் இனி வரும் நாட்களிலும் AIC  பற்றிய செய்திகள் வெளியாகும்.
AIC  நடக்க இருக்கும் இடம் மற்றும் தேதிகள் : நம் அனைத்திந்திய மாநாடு odisha ( பழைய பெயர் ஒரிசா ) மாநிலத்தில் உள்ள கோவில் நகரம் என அழைக்கப்பெறும் பூரி யில் 22-09-2018      சனிக்கிழமை  மற்றும் 23-09-2018  ஞாயிற்றுக்கிழமை  ஆகிய தினங்களில் நடைபெறும். பூரி இரயில் நிலையத்திற்கு மிக மிக அருகில் உள்ள " ரயில்வே டூரிஸ்ட் வளாகம் ", நம் மாநாடு நடத்துவதற்காக இடம் அளிக்கக்கோரி ரயில்வே அதிகாரிகளிடம் நமது வரவேற்புக்குழுவினர் விண்ணப்பித்துள்ளனர் . அந்த வளாகம் மாநாடு நடத்துவதற்கும் , சார்பாளர்கள் சுலபமாக ரயிலில் இருந்து இறங்கியதும் விரைவாக வந்து சேர்வதற்கும் மிகவும் உகந்த இடம்.. ஆனால் இரயில்வே இலாகா நமக்கு தருவதாக உறுதி அளிக்க வில்லை. அந்த வளாகம் யாத்திர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. ஒப்புதலுக்காக காத்ததிருக்கிறோம். அனுமதி பெற்றதும் தெரியப்படுத்துவோம்.
சார்பாளர் கட்டணம்.( Delegates Fee ): சார்பாளர் கட்டணம் உணவு மற்றும் தங்குமிடத்திக்காக ரூ 1000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21-09-18 இரவு உணவு, 22 மற்றும் 23 -09-18 காலை, மதியம் மற்றும் இரவு உணவு , 24-09-18 காலை உணவு மட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவு வகைகளுக்கு ஒரு நபருக்கு ரூ 900/- ஆகிறது. பார்வையாளர்கள் ( விசிட்டர்ஸ்/observers ) மற்றும் குடும்பத்தினர்  வந்தால், உணவு வகைகளுக்கு மட்டும் தலா  ரூ 1000/- வரவேற்குக்குழுவிடம் கொடுக்கப்பட வேண்டும்.
சிறிது காலத்திற்கு முன் , ஒரு BSNL ஓய்வூதியர் சங்கம் பூரியில் அனைத்திந்திய மாநாடு நடத்தியபோது சார்பாளர் கட்டணமாக ரூ 3000/- வசூலித்தார்கள்  ஆனால் நம்  சார்பாளர் தோழர்  ரூ 1000/- மட்டும் உணவு மற்றும் உறைவிடத்திற்கு அளித்தால் போதுமானது .
தங்குமிடம் : பூரியில் தங்குமிடத்திற்கான செலவு குறைவாக இருக்கும் என்று எண்ணினோம் . ஆம் தர்ம சாலாக்கள் அதிகம் உள்ளன. அவற்றில் அறைகள் எடுத்துத் தங்கினால் வாடகை குறைவுதான் . ஆனால் அங்கே உள்ள சுகாதார நிலைமைகள் நன்றாக இல்லை , சுத்தமாக இல்லை மேலும் கழிவறைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே நாம் தங்குவதற்கு துவாக இராது என்று எண்ணினோம். நம் தோழர்கள் அனைவருமே மூத்த குடிமக்கள். சவுகரியமான வசதிகளை எதிர்பார்க்கின்றனர். எனவே தான் செலவு சற்று அதிகமானாலும் பரவாயில்லை நல்ல ஹோட்டல்களில் அறைகளை ஏற்பாடு செய்யும்படி வரவேற்பு குழுவிடம் கூறியுள்ளோம்.
ஸ்ரீ ஜெகந்நாதர் கோவில் வகையறாவைச் சேர்ந்த ஹோட்டல்கள் நம் தீவிர பரிசீலனையில் உள்ளன அவையாவன 
(1) குண்டிச்சா பக்த நிவாஸ்  ( 60 அறைகள் )  கிராண்ட் ரோட் முடிவில் ஸ்ரீ குண்டிச்சா  கோவில் அருகில் உள்ளது 
 (2) ஸ்ரீ நீலாசலா பக்த நிவாஸ் ( 60 அறைகள்) . கிராண்ட் ரோட்-ல் உள்ளது 
(3) நீலாத்ரி வளாகம் ( 120 அறைகள்) கிராண்ட் ரோட் -ல் உள்ளது.
நீலாத்ரி தற்சமயம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது  அந்த வேலைகள் ஒரு மாதத்தில் முடிந்து விடும் என்று எண்ணுகிறோம்.
இந்த இடங்களில் 1000 சார்பாளர்களை 3 நாட்களுக்கு ( 21-09-18 to 23-09-18 வரை)தங்க வைக்க ரூ 17 லட்சம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதைத்தவிர மாநாடு நடக்கும் இடம், உணவருந்தும் இடம் , விளம்பரம் இவைகளுக்கு செலவு செய்ய வேண்டும்.
எனவே ஒரிசா தோழர்களுக்கு உதவும் விதமாக மத்திய சங்கம் உறுப்பினர் ஒவ்வொருவரிடமிருந்து ரூ 50/- நன்கொடையாகப் பெற்று வரவேற்பு குழுவிடம் வழங்க இருக்கிறோம். இதுவரையில் ரூ 8 லட்சம் சேர்ந்துள்ளது. ரூ 17 லட்சம் நன்கொடை பெறுவதில் எந்த வித பிரச்சினையும் இருக்காது என்று எண்ணுகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ 50/- மட்டுமே 
சார்பாளர்(Delegates ) எண்ணிக்கை:  நம்மால் 3000 அல்லது 5000 தோழர்கள் கொண்ட பிரமாண்டமான மாநாட்டினை நடத்த இயலும். அனைத்திந்திய மாநாட்டில் கலந்து கொள்ள நம் தோழர்கள் விரும்புகிறார்கள். ஆனால் வரவேற்பு குழுவினரின் சங்கடங்களை குறைக்க எண்ணி சார்பாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த உள்ளோம். அனைத்து மாவட்டங்களும் தாங்கள் CHQ க்கு அனுப்புகின்ற கோட்டாவின் அடிப்படையில் சார்பாளர்களை அனுப்பி வைக்க வேண்டும். எதாவது மாவட்டம் கூடுதலான தோழர்களை பார்வையாளர்களாக அல்லது விசிட்டர்களாக அனுப்பி வைத்தால் அவர்கள் தங்களுக்கான தங்குமிடத்தை அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
இருவர் தாங்கும் அறை ரூ 1000/- வரை நாள் ஒன்றுக்கு ஆகலாம்  விருப்பப்பட்டால் வரவேற்புக்குழுவினரே ஏற்பாடு செய்து தருவார்கள். வேண்டிய தொகையினை முன்பாகவே அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் அறைகள் நான் முன் பாராவில் குறிப்பிட்டது போல அவ்வளவு நன்றாக இருக்காது.

மீண்டும் சந்திப்போம் 






No comments:

Post a Comment