Thursday, 26 April 2018


காரைக்குடியில் 24-04-2018 அன்று ஓய்வூதியர் சங்கத்தின் கிளைக்கூட்டம் கிளைத்தலைவர் திரு.யாக்கூப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிளைச்செயலர் திரு.சுந்தரராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
காலஞ்சென்ற ஆபரேட்டர் ராஜ், அஞ்சல் நான்காம் பிரிவின் மாநிலச்செயலராக பல்லாண்டுகாலம் பணியாற்றிய AG.பசுபதி மற்றும் கருந்துளை பற்றிய கண்டுபிடிப்பில் பிரபல்யமானவரும் நியூட்டன்,ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு இணையாக வைத்து பேசப்படுவருமான ஸ்டீவ் ஹாக்கின்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டத்தின் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
மாவட்டத்தலைவர் திரு.ஜெயச்சந்திரன், மாவட்டச்செயலர் திரு.முருகன், மாநில துணைச்செயலர் திரு. நாகேஸ்வரன், மற்றும் NFTE மாவட்டச்செயலரும், கணக் கதிகாரியுமான ( ஓய்வூதியம்) திரு.மாரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்
பூரியில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டில் கலந்துகொள்ள கீழ்கண்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ராமச்சந்திரன்(Rtrd PA)
S. துரைபாண்டியன்
V. கணபதி
S.ராஜேந்திரன்
மேலும் வர விருப்பமுள்ளவர்கள்ஏப்ரல் 30-க்குள் பெயர் கொடுக்க வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது.
மருத்துவப்படியில் 3 மற்றும் 4-வது தவணை பெறுவதற்கான உத்தரவு இன்னும் போடப்படாமல் இருப்பது பற்றியும்(தற்பொழுது போடப்பட்டுள்ளது)
78.2-ல் extra increment வாங்கியோர்களுக்கு இன்னும் கிடைக்காமல் இருப்பது பற்றியும் கூட்டத்தில் கலந்துகொண்டோர் நிறையகேள்விகள் தொடுத்தனர்.
78.2-ல் மாநிலசங்கம் தொடுத்துள்ள வழக்கு பற்றியும் 01-01-2007 முதல் 78.2 அரியர்ஸ்க்கு எர்ணாகுளம் CAT-ல் தொடுத்துள்ள வழக்கு பற்றியும் 01-01-2006க்கு முன்பு பணிநிறைவு பெற்றோர்களுக்கு 50% அடிப்படை சம்பளத்தில் நிர்ணயம் செய்ய தொடுக்கப்பட்டுள்ள வழக்குபற்றியும், 7-வது சம்பளக்கமிசனின் ஊதியநிர்ணயம்பெற நமது சங்கம் எடுத்துவரும் முயற்சிகள்பற்றியும் நாகேஷ்வரன் விரிவாகப்பேசினார்.
அதாலத்தில் நாம் கொடுத்துள்ள பல்வேறு பிரச்னைகள் பற்றி AO(Pen) என்கின்ற முறையில் மாரி அவர்கள் விளக்கம் கொடுத்தார்.
ஓய்வூதியர், தனக்கும் தனது துணைக்குப் பின்னும் தங்களது ஊனமுற்ற பிள்ளைகள் அல்லது விதவைப்புதல்வி அல்லது மணமுறிவுபெற்ற புதல்வி ஆகியோருக்கு குடும்பஓய்வூதியம்பெற நிறைய விண்ணப்பங்கள் வருவதால் சென்னை CCA அலுவலகத்தில் இதற்கான தனி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்பிகாரம் அந்தந்த SSAக்களில் விண்ணப்பத்தைப்பெற்றுக்கொண்டு Acknowledgement கொடுக்கப்படும் என்றும் அதற்கான Format தயாரித்துக் கொண்டிருப் பதாகவும் மாரி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.










No comments:

Post a Comment