Sunday 26 March 2017

அகில இந்திய BSNL ஓய்வூதியர்   
                           நலச்சங்கம்
காரைக்குடி தொலைத்தொடர்பு   
                          மாவட்டம்

சிவகங்கை-புதியகிளை துவக்கம் 26-03-2017
காலை 11 மணிக்கு திரு, M.இராமச்சந்திரன் (Rtrd.SDE) அவர்கள் தலைமையில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

திரு.S. நடராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட துணைத்தலைவரும் சிவகங்கையில் கிளை அமைய முயற்சி எடுத்த வருமான திரு.A.சந்திரன் அவர்கள் 31 பேர் கொண்ட கிளை உறுப்பினர் பட்டியலை வாசித்தார்.

தலைவர் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தியதோடு உறுப்பினர்களை அறிமுகம் செய்துவைத்தார்.

மாநில உதவிச்செயலர் தோழர். நாகேஸ்வரன் அவர்கள் நமது சங்கம் உருவான வரலாறு பற்றியும் உலகநாடுகளில் ஓய்வூதியர் சலுகைகள் குறைக்கப்பட்டு வருவது பற்றியும் நமதுநாட்டில் ஓய்வூதியர்களுக்கான சலுகைகள் குறைக்கப்படுவது பற்றியும் நீதிமன்றத்தீர்ப்புகள் உதாசீனப்படுத்துவது பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டு, சங்கம் அமைப்பதன் அவசியம் பற்றியும், நமது சங்கத்தின் சாதனை பற்றியும் வருங் காலத்தில் ஆற்றவேண்டிய கடமைகள் பற்றியும்  அந்தக்கடமைகளை நிறைவேற்ற அமைப்புரீதியாக நாம் வலுவாக இருக்கவேண்டும் என்றும் அதற்கு இது போன்ற கிளை உருவாக்கங்கள் தேவை என்றும் கூறி புதிய கிளையை துவக்கிவைத்தார்.

மாவட்டச்செயலர் முருகன் அவர்கள் நிர்வாகிகள் தேர்வை நடத்திவைத்தார். 16 பேர்கொண்ட நிர்வாகிகள் பட்டியல் திரு.A.சந்திரன் அவர்களால் முன்மொழியப்பட்டு திரு. T.S.இன்னாசிமுத்து அவர்களால் வழிமொழியப்பட்டது. நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாவட்டச்செயலர் அறிவிக்க தலைவர் அவர்கள் நிர்வாகி களை அறிமுகம் செய்துவைத்தார்.

இராமநாதபுரம் கிளைச்செயலர் திரு C.இராமமூர்த்தி அவர்களும் பரமக்குடி கிளைப் பொருளர் திரு இராமசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். 

 மாவட்டச்செயலர் முருகன் அவர்கள் தனது வாழ்த்துரையில், நமது மாவட்ட சங்கத்தின் வளர்ச்சி பற்றியும் பரமக்குடி, காரைக்குடி, இராமநாதபுரம் போன்ற கிளைகளின் செயல்பாடுகள் பற்றியும் அந்தவரிசையில் சிவகங்கைக்கிளையும் தன் பங்கை ஆற்றவேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், அனைவரும் ஆயுள் சந்தா செலுத்த வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். மாதம் இருமுறை மத்திய சங்கத்தால் நல்லபல கருத்துக்களை- கட்டுரைகளை- ஓய்வூதியர் சம்பந்தப்பட்ட உத்திரவுகளை, தாங்கி தவறாமல் வெளியிடப்பட்டு வரும் பென்சன் பத்ரிகாவை அனைவரும் வாங்கி படிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அடிக்கடி கூட்டங்கள் நடத்தி செழுமையாக-செழிப்பாக கிளையை வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். கிளைச்சங்கத்தின் செயல் பாட்டுக்கு, உறுப்பினர்களின் பிரச்னை தீர்விற்கு மாவட்டசங்கம் என்றும் துணை நிற்கும் என்று கூறியதோடு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர். நெல்லை அருணா அவர்கள் ஆற்றிய சிறப்புரையில், சமீபத்தில் அகில இந்தியத்தலைவர்கள் தலைநகர் டெல்லி சென்றது பற்றியும், DOT சேர்மன் அவர்களிடம் பேட்டிகண்டது பற்றியும் BSNL உயரதிகாரிகளை சந்தித்து நமது பிரச்னைகளை பேசியது பற்றியும்  MTNL BDPA மற்றும் அதிகாரிகள் சங்கத்தலைவர்களை சந்தித்தது பற்றியும் 7-வது சம்பள கமிசனின் ஊதிய நிர்ணயத் தொகையை பெறுவதற்கு கூட்டு முயற்சிக்கு வித்திட்டது பற்றியும் எடுத்துரைத்தார். 

குறிப்பாக, இரவுநேர இலவசஅழைப்புகள் சலுகையை ஓய்வூதியர்களுக்கும் வழங்கக் கோரியதையும், உடனடியாக உத்தரவு போடப்பட்டது பற்றியும், உள்ளூர் அழைப்பு மட்டும் என்ற விதியினை மாற்றி STD வசதி கோரியது பற்றியும் அது சம்பந்தமான உத்தரவு விரைவில் போடப்பட உள்ளது பற்றியும், தரைவழித்தொலைபேசி கொடுக்க முடியாத இடங்களில் கைப்பேசிச் சலுகை வழங்கக் கோரியது பற்றியும், விரிவாக விளக்கினார்.  

மருத்துவ ஈட்டுத்தொகை பெறுவதில் தற்போதுள்ள தாமதத்தைப்போக்க விரைவில் புதிய சாப்ட்வேர் போடப்பட உள்ளதுபற்றியும், இதனால் அனுப்பப்படுகின்ற பில்கள் எந்தநிலையில் உள்ளது என்பதை சம்பந்தப்பட்டவர்களே இணையம் மூலம் தெரிந்து கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டார். 

           மேலும் 78.2 சம்பந்தமான திருத்தப்பட்ட ஓய்வூதிய உத்தரவுகள், தமிழ்மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 10-க்குள் எல்லாருக்கும் அனுப்பபட்டுவிடும் என்றும் இதற்கு முக்கிய காரணம் நமது சங்கத்தைச்சேர்ந்த தோழர்கள் எந்தவித பலனையும் எதிர்பார்க்காது CCA அலுவலகத்தில் வேலைபார்ப்பதினால்தான் என்று குறிப்பிட்டார்.

    மிக நீண்டநாட்களாக சிவகங்கையில் கிளை துவக்கப்பட உள்ளது பற்றியும் அதில் நான் கலந்துகொள்ளவேண்டும் என்றும் மாவட்டச் செயலர் அடிக்கடி குறிப்பிடுவார். இன்று அந்த வாய்ப்பை கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தோடு புதிய கிளைக்கும் புதிய நிர்வாகிகளுக்கும் மத்திய சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
செயலர்திரு. A. சந்திரன் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை முடித்துவைத்தார்.

. சிவகங்கைக்கிளை நிர்வாகிகள்
1 தலைவர் M. இராமச்சந்திரன் Rtrd SDE சிவகங்கை
2 துணைத்தலைவர் B. ஜெயராமன் Rtrd TTA சிவகங்கை
3 செயலர் A. சந்திரன் Rtrd. STS சிவகங்கை
4 துணைச்செயலர் K. விநாயகம் Rtrd.SrTOA(P) சிவகங்கை
5 பொருளர் K. இராமமூர்த்தி Rtrd.SrTOA(T) சிவகங்கை
6 துணைப்பொருளர் S. நடராஜன் Rtrd TM சிவகங்கை
7 அமைப்புச்செயலர் P. பன்னீர்செல்வம் Rtrd.SrTOA(T) சிவகங்கை
செயற்குழு உறுப்பினர்கள்
V.சண்முகம்      (Rtrd Driver)   சிவகங்கை
A.மத்தியாஸ்      (Rtrd.TTA)    சிவகங்கை
S.மனோகரன்      (Rtrd.TM)    சிவகங்கை
R.இராஜசேகரன்    (Rtrd.CTM)   சிவகங்கை
T.S.இன்னாசிமுத்து (Rtrd.LI)     சிவகங்கை
A.இரத்தினம்       (Rtrd.TM)    சிங்கம்புணரி
B.இராஜேந்திரன்    (Rtrd.TM)    திருப்பத்தூர்
M.முத்துராமலிங்கம்(Rtrd.Sr.TOA) மானாமதுரை
S.ஆரோக்கியமேரி (Rtrd.Gr.D)   சிவகங்கை

        தணிக்கையாளர்: M. இராஜகோபால் (Rtrd.TM) சிவகங்கை 


No comments:

Post a Comment