AIBSNLPWA அனைத்து இந்திய சங்க அறைகூவலுக்கு இணங்க சங்க
அமைப்பு தினக் கூட்டம் இன்று குடந்தை மாவட்டச் சங்கத்தின் சார்பில் குடந்தை சங்க
அலுவலகத்தில் தோழர் N.இசக்கிமுத்து அவர்கள்
தலமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் R.ஜெயராமன், மா.அ.செயலாளர், மயிலை தோழர்கள் R.சண்முகவேல், R.,செந்திலாதிபன்,
ஆகியோர் சங்க அமைந்த
வரலாறு, இன்றைய நிலை பற்றி
உரையாற்றினார்கள். மாநில அமைப்புச்செயலாளர் தோழர் N. தனபாலன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து சிறப்புரை
ஆற்றினார்கள். விழாவின் மகுடமாக அகில இந்திய சங்க அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து
அகில இந்திய சங்கத்தை அமைப்பதில் குடந்தை
மாவட்டத்தின் சார்பாக பங்கெடுத்த பெருமை மிகு தோழர். N.அனந்தன்,சங்க ஆலோசகர் அவர்கள்
தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டது பல தோழர்களுக்கு உத்வேகமாக இருந்தது.
கூட்டத்திற்கு 47 தோழர்கள் மாவட்டத்தின் பல
பகுதிகளிருந்தும் வந்து கலந்து கொண்டனர். தோழர். மதியழகன் அவர்கள் நன்றி கூற சங்க
அமைப்பு தினக் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
குடந்தை மாவட்டம் மயிலாடுதுறையில் பணியாற்றி 10.12.2016-ல் மறைந்த தோழர். P.செல்வகுமார் அவர்களின் துணைவியார் திருமதி. S.உஷா அவர்களுக்கு இலாக்காவில் கிடைக்கவேண்டிய
பணப்பலன்கள் பல் வேறு காரணங்களால் கிடைக்காமல் இருந்தது. இரண்டரை வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த
பிரச்சனை. அதற்கான முயற்சியில் நமது மாவட்டச் சங்கம் இறங்கி தேவையான தகவல்களைப் பெற்று
மாநில சங்கத்திற்கு அனுப்பியது. மாநில சங்கம் எடுத்த பல் வேறு முயற்சியின் காரணமாக
அதாலத்திற்கு விஷயம் எடுத்துச் செல்லப்பட்டு கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற
அதாலத்தில் தீர்க்கப்பட்டு தற்போது DCRG கிடைக்கப்பெற்றுள்ளது. பென்சனும் விரைவில் கிடைக்கும். இதற்கான முயற்சியில் ஈடுபட்ட மயிலாடுதுறை தோழர்கள். R. சண்முகவேல், R.செந்திலாதிபன், மாவட்ட ஆலோசகர் தோழர். N.அனந்தன் மற்றும் அனைத்து மாவட்ட தோழர்களுக்கும், குறிப்பாக நமது மாநில செயலாளர் தோழர். R.வெங்கடாசலம்
அவர்களின் சீறிய பணிக்கும் குடந்தை மாவட்டச் சங்கம்
தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
சங்கத்தின் வளர்ச்சிக்கு தோழிய்ர். S.உஷா அவர்கள் நன்கொடையாக ரூபாய் 5000/- வழங்கி உள்ளார். அவர்களுக்கு குடந்தை மாவட்டச் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment