Tuesday 27 August 2019


                ருமபுரியில் சங்க அமைப்பு தின சிறப்ப கூட்டம்   
24-08-2019  சனிக்கிழமை காலை 10-30மணியளவில் அமைப்பு தின சிறப்பு கூட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.தோழர் G.தங்கபாண்டியன் சங்க அமைப்பு, சாதனைகள் குறித்து முழக்கம் எழுப்ப, வின்னதிரும் முழக்கங்களோடு தோழர் V.ராமமூர்த்திராவ் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத்தலைவர் தோழர் முனியன் தலைமையில் கவுரவத்தலைவர் தோழர் வி சுந்தரம்,தருமபுரி கிளைச்செயலாளர் தோழர் அசோகன், ஒசூர் கிளைச்செயலாளர் தோழர் சத்தியேந்திரன், கிருஷ்ணகிரி கிளைச்செயலாளர்(பொறுப்பு) தோழர் C.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்க கூட்டம் தொடங்கியது. தோழர் சுந்தரமூர்த்தி அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் தோழர் சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். முன்னிலை வகித்த தோழர்கள் மற்றும் தோழர்கள் கோவிந்தன், தங்கபாண்டியன், வடிவேலு,  மாணிக்கம் ஆகியோரது சிற்றூரைக்குப் பின்னர் மாநில துணைச்செயலாளர் தோழர் பட்டாபிராமன் தனது சிறப்புரையில் சங்கம் உருவான சூழ்நிலை குறித்தும் தற்போது வளர்ந்து சாதனை படைத்து வருவது குறித்தும் விளக்கினர்.

நமது  மாநிலச் செயலாளர் தோழர் R.V   தனது சிறப்புரையில் 23-08-2019 அன்று நடந்த அதாலத் குறித்தும் , 78.2 IDA இணைப்பு குறித்தும், கூடுதல் இன்கிரிமென்ட் வழக்கு குறித்தும், ஓய்வூதிய மாற்றத்துக்காக நமது அகில இந்திய தலைவர்கள் மேற்கொண்டு வரும் இடையற முயற்சிகள் குறித்தும், ஓய்வூதிய மாற்றத்துக்கான மாற்று திட்டம்  குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். மாவட்டப்பொருளாளர்  தோழர் வணங்காமுடி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. 70 - க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். மதிய உணவு வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment