03.02.2019 மற்றும் 14.02.2019
மத்திய செயற்குழு கூட்டம் 13.02.2019 அன்று காலை 1000 க்கு கன்னியாகுமரியில் உள்ளவிவேகானந்தா கேந்திரா வில் தோழர் P S R அவர்கள் தலைமையில் தொடங்கியது .
பொது செயலாளர் தோழர் கெங்காதரராவ் , நாகர்கோயில் மாவட்ட செயலாளர் தோழர் செல்லையா அவர்கள் வரவேற்புரையாற்றினர் .
29 மத்திய சங்க நிர்வாகிகளும் 15 மாநில சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர் .
பூரி அகில இந்திய மாநாடு அனைத்து துணை குழுக்களும் கணக்கினை முடித்து வரவேற்புக்குழு செயலரிடம் 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவேண்டும் .
வரவேற்புக்குழு அடுத்த 2 மாதங்களுக்குள் கணக்கை முடித்து, தணிக்கை செய்து மத்திய சங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும்
பூரி அகில இந்திய மாநாட்டு முடிவினை ஒட்டி 07.10.2018 அன்று நடைபெற்ற மத்திய செயலக முடிவுப்படி உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்திய அனைத்து மாநில சங்கங்களையும் மத்திய செயற்குழு பாராட்டியது .
அன்றைய முடிவின் படி இன்று மத்திய செயற்குழு நடைபெறுகிறது .
அக்கூட்டத்தில் PENSIONERS PATRIKA சந்தாவினை உயர்த்துவது எனவும் ,இலவச பிரதிகளை நிறுத்துவதெனவும், முடிவு செய்யப்பட்டிருந்தது . இது தொடர்பாக செயற்குழு விவாதித்தது .
பின் மாவட்ட சங்கங்களுக்கு 2 பிரதிகளை அனுப்ப முடிவு செய்தது .
பூரி மாநாட்டில் வெளியிடப்பட்ட புத்தகம் பற்றி விவாதித்து 2 வது பதிப்பாக 2000 பிரதிகள் அட்சிட முடிவு செய்யப்பட்டது .அதில் 2000 ம் ஆண்டு செப்டம்பர் மாத ஓய்வூதியம் குறித்த ஒப்பந்தம் இடம்பெற வேண்டுமென்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது .
மத்திய சங்க செயலகம் .அவசர ,அவசியத்திற்கு முடிவெடுக்க தலைவர், பொது செயலாளர்,2 துணை பொது செயலாளர்கள் பொருளாளர் , துணைத்தலைவர்கள் ( D G.,SUKUMARAN , G.NATARAJAN
) துணை பொருளாளர் ,தமிழ் மாநில செயலாளர்,சென்னை மாநில செயலாளர் ஆகியோர் அடங்கிய செயலகம் அமைக்கப்பட்டது .
மத்திய சங்க அலுவலகத்திற்கு FURNITURE வாங்க ரூ .30,000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது
தணிக்கை செய்யப்படாத வரவு,செலவு அறிக்கை ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது .
BSNL ..MRS :- BSNL ன் நிதி நிலை இருக்கும் சுழலில் இத்திட்டம் குறித்து சேவையில் உள்ள சங்கங்களிடம் ஆலோசனை கேட்டு இலாகா கடிதம் எழுதியுள்ளது இங்கு நடந்த வாதத்தின் அடிப்படையில் நமது சங்கமும் கருத்தினை தெரிவிக்கும்
8 சங்கங்களை ஒருங்கிணைத்து போராடும் மத்திய சங்கத்தின் செயல்பாடு பாராட்டப்பட்டது துண்டிக்கப்பட்ட வில் தொலைபேசிக்குப்பதிலாக சலுகையுடன் கூடிய மொபைல் வழங்க வலியுறுத்தப்பட்டது வரவேற்பு குழுவாக செயல்பட்ட
நாகர்கோயில் தோழர்கள் செல்லையா உட்பட 14 தோழர்கள் ,நெல்லை தோழர் E .கனகராஜ் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர் .
No comments:
Post a Comment