Tuesday 18 June 2024

 

நேற்று 15/06/2024 சனிக்கிழமை நமது சங்க அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் M.கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.17 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

19/06/24 புதன்கிழமை நடக்க இருக்கின்ற நமது AGB வெற்றிகரமாக நடத்தி முடித்திட வேண்டிய ஆலோசனை களையும் கருத்துக்களையும் செயற்குழு உறுப்பினர்கள் கூறினர்.இக்கூட்டத்தில்மாவட்ட செயலர் தோழர் R.பலராமன் அவர்கள் 01/04/2023 முதல் 31/05/2024 வரையிலான செயல்பாட்டு அறிக்கையினை வாசித்து செயற்குழுவின் ஒப்புதலை பெற்றார்.

பின்னர் நமது மாவட்ட பொருளாளர் தோழர் M.ராமசாமி அவர்கள் 01/04/2023 முதல் 31/03/2024 வரையிலான கணக்கு வரவு செலவினை வாசித்து செயற்குழுவின் ஒப்புதலை பெற்றார்.

பிறகு 19/06/2024 மற்றும் 20/06/2024 புதன் மற்றும் வியாழன் அன்று நமது கிளை முன்னின்று நடத்த இருக்கின்ற மாநில செயற்குழு கமிட்டி கூட்டம் சிறப்பாக நடந்தேற நாம் ஆற்ற வேண்டிய செயல்களை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

AGB தீர்மானங்களும் விவாதிக்கப்பட்டு செயற்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வணக்கம்
R.பலராமன்
மாவட்ட செயலர்











No comments:

Post a Comment