Saturday 29 April 2023

 

இன்று 29 4 2023 சனிக்கிழமை தஞ்சை மாவட்ட  AIBSNLPWA  வின் சிறப்பு கூட்டம் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் வருகின்ற 3 5 2023 புதன்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு காலை 11 மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் அமைந்துள்ள நமது சங்க அலுவலக அறையில் 30-க்கும் மேற்பட்ட தோழர் தோழியர்கள் பங்கேற்க மாவட்ட தலைவர் தோழியர் சந்திரகுமாரி தலைமையில் மாநில தலைவர் வீ. சாமிநாதன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது . 

தஞ்சை மாவட்ட சிறப்பு குழு உறுப்பினர்கள் எவ்வாறு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குழுக்களின் வேலைகளை எவ்வாறு திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று தெளிவாக முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள அகில இந்திய மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரூம் அலார்ட்மென்ட் செய்திகளை மாநில செயலர் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அது சம்பந்தமான விவரங்களை மாநில செயலருக்கு அனுப்பப்பட்டு CEC வாட்ஸ் அப்பில் பதிவிட அனுப்புவதற்கான முடிவு எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. மாவட்ட பொருளாளர் தோழர் கே சீனு நேற்று மாலை ஒரு சிறு விபத்தில் ஆட்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலத்துடன் விரைவாக திரும்பி தனது பணிகளை சிறப்புற செய்வதற்கான கூட்டு பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட்டு விரைவில் நலம் பெற இறை சக்தியிடம் நமது வேண்டுதலை செலுத்தினோம். தோழர் விரைவில் குணம்பெற அனைவரின் வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் உரித்தாக்குகிறோம். சி சி சிறப்புற நடைபெற அனைவரது ஒத்துழைப்பையும் நல்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கே சந்தான கோபாலன்
முதன்மை ஆலோசகர்
AIBSNLPWA THANJAI DISTRICT

ACCOMMODATION DETAILS



தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்குகின்ற தோழர்கள் ரயில் நிலையம் TO புதிய பஸ் STAND நகர பேருந்தில் ஏறி(ROUTE NO 6) " குழந்தை ஏசு கோவில் " நிறுத்தத்தில் இறங்கவும் .
புதிய பஸ் STAND ல் இறங்கும் தோழர்கள் பழைய பஸ் STAND செல்லும் பேருந்தில் ஏறி (ROUTE NO 6 )
 " குழந்தை ஏசு கோவில் " நிறுத்தத்தில் இறங்கவும். 
அருகிலேயே அரங்கம் உள்ளது.
முகவரி: அருட்பணி மையம்,
பிஷப் சுந்தரம் வளாகம் 
( குழந்தை ஏசு கோவில் எதிர்புறம் )
புதுக்கோட்டை ரோடு ,
தஞ்சாவூர் 613 007
உதவிக்கு : திரு. M .இருதயராஜ்       MOBILE NO 94437 27399
                   தோழர் K .அய்யனார்        MOBILE NO 94422 71956
                   தோழர் ஜெரால்ட்                MOBILE NO 90875 24793  
                   (அருள்பணி  மையம் ஊழியர் )










No comments:

Post a Comment