Tuesday 11 April 2023

 

08-04-2023 இரண்டாம் சனிக்கிழமை தஞ்சை மாவட்ட   AIBSNLPWAன் மாதாந்திர கலந்துரையாடல் பொதுக்கூட்டம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை பத்து மணிக்கு தொடங்கியது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள மாவட்டத் தலைவர் தோழியர் சந்திரகுமாரி தலைமை ஏற்க மாநில தலைவர் முன்னிலை வகிக்க தோழியர் சாரதா சந்தான கோபாலன் கடவுள் வாழ்த்து பாடிட மாவட்ட தலைவர் முன்னுரையில் மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்திட மாவட்ட செயலாளர் . அய்யனார் வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது வரவேற்புரையில் வருகின்ற மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடக்க இருக்கிற நிகழ்வுகளை விளக்கி உரையாற்றி அனைவரையும் வரவேற்று அமர்ந்தார்.

அடுத்து தோழர் கே சந்தான கோபாலன் முதன்மை ஆலோசகர் நடக்க இருக்கிற மாநில CEC, FMA ,IDA , ஓய்வூதிய மாற்றம், இன்கம் டாக்ஸ், மற்றும் அகில இந்திய மாநில மாவட்ட சங்கங்களின் நிகழ்வுகள் பற்றி உரையாற்றினார். அடுத்து மாவட்ட செயல் தலைவர் நடக்க இருக்கிற மாநில CEC  ஓய்வூதிய மாற்றம் மற்றும் சமூக சிந்தனைகள் பற்றி உரையாற்றினார்.

தோழர்கள் கேசவன், பாஸ்கரன் ,என். பாலசுப்பிரமணியம் 2 ,நாகராஜன், தோழியர்கள் மல்லிகா சுகுமாரன் ,பத்மினி   ,வேதநாயகி, தோழர் கைலாசம் ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.  

தோழர் வி. சாமிநாதன் மாநில தலைவர் நடக்க இருக்கிற CEC  பற்றியும் ஓய்வு ஊதியம் மாற்றம் பற்றியும் FMA  மற்றும் இன்கம் டாக்ஸ் மற்றும் உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்கள் பற்றியும் தெளிவானதொரு உரையாற்றி அமர்ந்தார். முடிவில் மாவட்ட செயலர் மாவட்ட சங்க நிகழ்வுகளையும் உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு முறையான பதில்களும் வருகின்ற மாநில CEC  பற்றியும் தெளிவானதொரு உரையாற்றினார்.

அடுத்து வழக்கம் போல் இந்த மாதம் மணி விழா சதாபிஷேகம் கண்ட தோழர்கள் மற்றும் பிறந்தநாள் அமைந்திட்ட தோழர் தோழியர்கள் அனைவருக்கும் பிறந்தநாள் விழா சீரும் சிறப்பான முறையிலே உறுப்பினர்களின் கரகோஷத்தோடு கேக் வெட்டப்பட்டு வாழ்த்து கோஷங்களோடு இனிதாக கொண்டாடப்பட்டது. தோழர் கே. சந்தானகோபாலன் இன்று பிறந்தநாள் மணி விழா சதாபிஷேகம் கண்ட தோழர் தோழியர்களை வாழ்த்தி உரையாற்றினார்.

 கூட்ட நிறைவில் தோழர் கே .சீனு மாவட்ட பொருளாளர் நன்றி நவில கூட்டம் இனிது முடிவுற்றது.

வழக்கம்போல் தஞ்சை பாரம்பரிய இன்சுவை மதிய உணவு உடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.




No comments:

Post a Comment