Sunday 12 March 2023

 

11.03.2023  சனிக்கிழமை தஞ்சை மாவட்ட AIBSNLPWA  சார்பாக உலக மகளிர் தினம் மற்றும் மாதாந்திர கலந்துரையாடல் பொதுக்கூட்டமும் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை  பத்து மணிக்கு கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் தங்கள் குடும்பத்தினருடனும் மற்றும் குழந்தைகளுடனும் கலந்து கொண்டு சிறப்பித்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

தோழியர் சந்திரகுமாரி மாவட்ட தலைவர் தலைமை வகித்தார் . தோழர்கள் வீ. சாமிநாதன் மாநிலத் தலைவர் தோழர் வீரபாண்டியன் மாநிலத் துணைச் செயலாளர் மற்றும் பல தோழர்கள்  முன்னிலை  வகிக்க உலக மகளிர் தின கூட்டம் இனிதே ஆரம்பமாகியது. தோழர் . அய்யனார் மாவட்ட செயலாளர் வரவேற்புரை ஆற்றினார்.மாநில துணை செயலர் வீரபாண்டியன் பட்டுக்கோட்டை மட்டும் மாநில தலைவர் தோழர் வீ. சாமிநாதன் இருவரும் உலக மகளிர் தினத்தைப் பற்றி சிறப்பான உரையாற்றி னார்கள்.

தோழியர் பொன்னழகு தலைமை  உரையாற்றி கருத்தரங்கை ஆரம்பித்து வைக்க தோழியர் ஆர் .கோதாவரி வரவேற்புரை நிகழ்த்தினார். அடுத்து தோழியர் எம் .பத்மினி வரலாற்றில் தடம் பதித்த பெண்கள் என்ற தலைப்பிலும் தோழியர் மல்லிகா சுகுமாரன் பொதுவாழ்வில் மகளிர் சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பிலும் தோழியர் .லைலா பானு தையலை உயர்வு செய் என்ற தலைப்பிலும் தோழியர் . டி அருள் செல்வி வானம் வசப்படும் என்ற தலைப்பிலும் தோழியர் ஜே. வேதநாயகி பக்தி இலக்கியத்தில் பெண்கள் என்ற தலைப்பிலும் அருமையாக தங்கள் கருத்துக்களை அழகாக பதிவு செய்தனர்.

இன்றைய உலக மகளிர் தின விழா பிரதம அழைப்பாளர்கள் ஸ்ரீமதி பாலசந்தர சேனா டி எஸ் பொது மேலாளர் BSNL  தஞ்சை திரு S. ராஜ்குமார் DGM BSNL தஞ்சை திருமதி என். அமுதா IFA BSNL தஞ்சை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பானதொரு வாழ்த்து செய்திகளை நம்முடன் பரிமாறிக் கொண்டனர்.

பங்குபெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தஞ்சை பாரம்பரிய இன் சுவை மதிய உணவுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

மகளிர் தின நிகழ்வின் மற்ற நிழற்படங்களைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.

CLICK HERE WITH YOUR MOUSE ARROW TO SEE OTHER PHOTOS











No comments:

Post a Comment