Sunday 18 December 2022

 

                                                   SALEM EAST

பென்சனர் தினத்தை கொண்டாடும் விதமாக 16 12 22 அன்று ஒய் எம் சி ஹாலில் நமது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அதில் சிறப்பு அழைப்பாளராக   தோழர் பி வேணுகோபால் அகில இந்திய அமைப்பு செயலாளர் அவர்கள் கலந்து கொண்டார் மேலும் சிறப்பு பேச்சாளராக தோழர் கே முத்தையாலு  அவர்கள் அகில இந்திய துணை தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் தலைவர் கே பி ஆர் அவர்கள் கூட்டத்தை தொடங்கி வைத்தார்  செயலர் கணேசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் மாநில துணை செயலர் தோழர் பட்டாபிராமன் அவர்கள் கருத்துரை வழங்கினார் தோழர் அஸ்லாம் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
 இப்படிக்கு
 அகில இந்திய BSNL  பென்சனர் நலச்சங்கம்
 சேலம் கிழக்கு மாவட்டம்.

                                        SALEM WEST

Pensioners day at Salem West branch and GB meeting on 17.12.22 18/12/2022
The Pensioners Day meeting  presided over by our President Sri.M.P.Velusamy began with prayer and then homage paid  to our departed member Smt.A.S.Vanaja SDE.
Then detailed report of AIC was given by District Secretary and various aspects of our association. Sri.P.Venugopal was honoured by our President on the eve of assuming the AIC Organizing Secretary post. He gave us the maiden speech with elaborate details about AIC. Recently we were having a Liaison meeting ,  attended by DGM, IFA and AOs. Lengthy discussions about our medical problems and pending Family pensioners in detail and steps were taken to resolve the problem. All the delegates who attended the AIC spoke. Today's meeting was attended by more than 150 members. All were served with SKC . In this meeting more than 31 members who have attained the age of 70 and 80 were honoured by our President.
The members were asked to attend the demonstration on 19.12.22 in front of GM. Office by 9.30 AM. sharp and make it  a grand success.
T.S.Raghupathy. D.S.Salem West.
                                      
                                  TIRUNELVELI

நமது மாவட்ட சங்கம் சார்பாக ஓய்வூதியர் தின கூட்டம் பாளை சுபம் மண்டபத்தில் மாவட்ட தலைவர் தோழர் சம்மனசு தலைமையில் துவங்கியது. நமது மாவட்ட சங்கத்தின் ஆலோசகர்  மூத்த தோழர் T.ஆவுடைநாயகம் வரவேற்புரை நல்கினார். தொடர்ந்து தோழர் கோமதி சங்கர் அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர் சம்மனசு தமது தலைமை உரையில் இன்றைய ஓய்வூதியர் தின முக்கியத்துவம் பற்றியும் நமது மாவட்ட சங்கத்தின் நிகழ்வுகள், மாநில சங்க செயல்பாடுகள் பற்றியும் கூறினார். ஓய்வூதிய மாற்றம் கோரிக்கை வைத்து 19.12.2022 அன்று நடைபெற உள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் கூறினார். தமது சிறப்புரையில் சிறப்பு அழைப்பாளரும் மாநில செயலருமான தோழர்.

 S. சுந்தரகிருஷ்ணன் சமிபத்தில் நடந்து முடிந்த அகில இந்திய மாநாட்டு நிகழ்வுகள் பற்றியும் BSNL ஊதியம் மாற்றம் இல்லாமல் ஓய்வூதிய மாற்றத்திற்கான அவசியம் பற்றியும் நமது fitment கோரிக்கைகளின் பின்னணிவரவிருக்கும் போராட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மெடிக்கல் பில்கள் பட்டுவாடா செய்ய மாநில சங்கம் எடுத்த முயற்சிகள், நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் மாநில மட்டத்தில் எடுக்கப்பட்ட பிரச்சினைகள், வங்கி - சம்பாண் ஓய்வூதிய மாறுதல், FMA வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம், CGHS திட்டத்திற்கு ஓய்வூதியர்களின் மாற்றம் குறித்து விளக்கி பேசினார். பின்னர் 70,80 வயது பூர்த்தி ஆன நமது சங்க ஓய்வூதியர்களை மாநில செயலர் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கௌரவித்தது பாராட்டினர். தோழர் E. கனகராஜ் 19.12.2022ல் நடைபெறவிருக்கும் ஆர்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.

நிர்வாக தரப்பில் DGM (Admin) திரு வீராசாமி, IFA திரு கண்ணன் இருவரும் கலந்து கொண்டனர்.

ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுமார் 350 பேர் கலந்து கொண்ட இன்றைய கூட்டம் மாவட்ட செயலாளர் தோழர் பரமசிவன்  19.12.2022 அன்றைய போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற  வேண்டுகோளுடன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
TUTICORIN
ஓய்வூதியர் தினம்  திரு Lதாமஸ். தலைமையில்நடைபெற்றது.  150 தோழர்கள், தோழியர்கள் கலந்து கொண்டனர். தேசியக் கொடியைதோழியர். M தங்கப்பூ அவர்களும் சங்க கொடியை மாநில உதவி செயலர் திருN.  அம்பிகாபதி  அவர்கள். ஏற்றினர். வரவேற்புரை தோழர் M.  சொர்ணராஜ்.   துவக்கவுரை திரு S பால்சாமி அவர்கள் ஆற்றினர். சிறப்புரை திரு Nஅம்பிகாபதி. அவர்கள் பேசினார்  சிறப்பு. விருந்தினர் திரு டாக்டர் சுந்தரலிங்கம். MBBS.  Dy. Director. TB Department.  அரசு மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி அவர்கள் கலந்து உரையாற்றினைர் . நமது தோழர்கள் கேள்விக்கு. ஆலோசனை வழங்கினார். பின்பு 70,வயது 80. வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு. பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்கள்.  நன்றியுரையை தோழர். G உதயசூரியன்நன்றி கூறிய பின். மதிய உணவுக்கு பின் கூட்டம் இனிது முடிந்தது.
நன்றியுடன்
S.சுப்பையா
செயலர் தூத்துக்குடி .

VELLORE

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் பென்சனர் தின சிறப்பு கூட்டம்வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கிளை ஆண்டு விழா மற்றும் பென்சனர் தின விழாவில் மாநிலச் செயலர்

No comments:

Post a Comment