Sunday 26 June 2022

 

தோழர்களே! தோழியர்களே!

25/06/2022 அன்று கள்ளக்குறிச்சி பகுதியின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு  மாவட்ட தலைவர் தோழர் P ஜெயராமன் அவர்கள் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக 80 வயது அகவை எட்டிய மூத்த தோழர்கள் திரு பாலசுப்பிரமணியன் Retired AGM, திரு யாகூப் சேட் Retired LI ஆகியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தோழர் அர்ஜுனன் அவர்கள் இருவருக்கும் கிரீடம் சூட்ட,  நமது மாநிலச் செயலாளர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர்கள் V அர்ஜுனன், S பொன்மலை, K சுப்பிரமணியன் ஆகியோர்கள் முறையேபகுதித் தலைவர், பகுதி ஒருங்கிணைப்பாளர், பகுதி பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..

மாநில சங்க துணைத்தலைவர் தோழர் சந்திரமோகன் அவர்கள் CGHS பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மாநிலச் செயலாளர் தோழர் R வெங்கடாச்சலம் அவர்கள் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஓய்வு ஊதிய மாற்றம் பெறுவதற்கான நமது சங்கத்தின் முயற்சிகள், மத்திய சங்க செயல்பாடுகள் மற்றும் VRS-2019 விருப்ப ஓய்வு திட்டத்தின்படி  ஓய்வு பெற்றவர்களில்  TT, JE பதவிகளில் இருந்த சில தோழர்களுக்கு ஓய்வு ஊதியம் CCATN அலுவலகத்தால் குறைக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நமது மத்திய சங்கம் ஆற்றிவரும் பணிகளை பட்டியலிட்டார். விரைவில் இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

கடந்த இரண்டு வருடங்களில் தனி ஒரு மனிதனாக நின்று கள்ளக்குறிச்சி பகுதி ஓய்வூதியர்களின் அனைத்து பிரச்சனைகளும் தலையிட்டு அவர்களுக்குரிய அத்தனை உரிமைகளையும் பெற்றுத்தந்த தோழர் மணி அவர்களின் பணி என்பது மிகவும் பாராட்டுக்குரியது. அவரது சீரிய பணிக்காக தோழர் மணி அவர்களை பாராட்டுவதில் மாவட்ட சங்கம் பெருமை கொள்கிறது. அதேபோல் NFPTE-BSNL கள்ளக்குறிச்சி பொறுப்பாளர் தோழர் சைதன்யாJE அவர்கள் ஓய்வூதியர்கள்பால் காட்டும் பேரன்பை மாவட்ட சங்கம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறது.VRS-2019 விருப்ப ஓய்வு திட்டத்தின் போது கள்ளக்குறிச்சி தோழர்களின் பென்ஷன் பேப்பர்களை தயார் செய்வதிலும் உயிர்வாழ் சான்றிதழ் எடுத்துக் கொடுப்பதிலும் அளப்பரிய சேவையை அவர் ஆற்றியுள்ளார். அவருக்கு மாவட்ட சங்கம் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பொன்மலை அவர்கள் நன்றி கூறினார்.







No comments:

Post a Comment