Wednesday, 17 March 2021

 

நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ படி (Fixed Medical Allowance )  மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதந்தோறும் ரூபாய் 1000 அவர்கள் CGHS   மருத்துவ மனை வரம்பிற்குள் வராத பகுதிகளில் வசித்தால் (ஒவ்வொரு மாதம் மும்) ஓய்வூதிய தோடு சேர்த்து வழங்க படுகிறது. BSNL ல் இருந்து IDA சம்பளத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று 21.10.2019 ல் தொலை தொடர்பு இலாக்கா (DOT) உத்தரவினை சுட்டி காட்டி, நமது மத்திய சங்க பொதுச் செயலாளர் 02.02.2021  அன்று திரு P. K. சின்ஹா, நிதித்துறை உறுப்பினர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.
உத்திரவு எண் 13-6/2020-21/BA&IT/54 to 86  04.03.2021 தேதியிட்ட உத்திரவை எல்லா தொலை தொடர்பு மாநில கணக்காயர்களுக்கும் ( Pr. CCA ) அனுப்பி ரூபாய் 1000 கொடுப்பதற்க்கான ஆயத்த பணிகளை தொடங்குமாறு அறிவுறுத்தியத்தின் அடிப்படையில்,   நமது   Jt. CCA திரு பாலசுப்பிரமணியம் அவர்களிடம் விவாதிக்க பட்டது. விரைவில் இந்த மருத்துவ படியை நமது  ஓய்வூதியர்களுக்கும்  கொடுப்பதற்கான வழி காட்டு முறையை (instructions) விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக தெரிவித்து உள்ளார்.

தோழர்களே, BSNL-ல் நிலவும் நிதி நெருக்கடியான சூழலில், மேற்கண்ட உத்திரவு வந்து இருப்பது தமிழகத்தில் உள்ள CGHS   மருத்துவ மனை வரம்பிற்குள் வராத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு  மாதா மாதம் FMA ஓய்வூதியதோடு சேர்த்து பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. இது பற்றிய விவரங்களை CCA அலுவலகம் வெளியிட்ட பின் மேலும் இது குறித்து தெரிவிக்கப்படும். இந்த மருத்துவ Allowance பெறுவதற்கு BSNL  MRS  card surrender செய்ய வேண்டும். CGHS கார்டு பெற வேண்டிய தில்லை.
....Circle Secretary.


2 comments:

  1. MRS கார்டை சரண்டர் செய்தால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை எவ்வாறு பெற முடியும்?

    ReplyDelete
  2. BSNL MRS அட்டையை திருப்பி
    கொடுத்து விட்டும் CGHS க்கு போகாமலும் மாதம் ரூ 1000
    பெறுவது உள் நோயாளியாக
    சிகிச்சை பெறுவது தடைபடுவ
    தென்றால் இருமுறை அல்ல
    அதற்கு மேலும்(ஓய்வூதியர்,
    அவர்சாந்தவர்"முழுஉடல்பரிசோ
    தனைக்குப்பின்")ஆய்வு செய்து
    முடிவு எடுக்கவும்-காளிதாசன்.

    ReplyDelete