Monday 22 March 2021

 

AIBSNLPWA THANJAI DISTRICT   21.03.2021. 
 இன்று காலை 10 மணி அளவில் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் இனிதாக தொடங்கி மதியம் 2 மணி அளவில் முடிவுற்றது. கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் விழாவினை இந்த கொரோனா காலத்திலும் கலந்து கொண்டு பிறப்பித்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

இன்றைய விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ வி ஸ்ரீகுமார் ITS ,GMT  BSNL தஞ்சாவூர், திரு பொன்.வை. கருணாநிதி ITS  PGM ஓய்வு BSNL  தஞ்சாவூர் மற்றும் மனிதநேய மருத்துவர் ஷர்மிளா பேகம் B.S.M.S. அரசு மருத்துவர் ஒரத்தநாடு ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தவிரவும் நமது மதுரை மாவட்ட செயலாளர் தோழர் வீராசாமி மதுரை மாவட்ட பொருளாளர் தோழர் சீனிவாசகன் ஆகியோரும் நமது அழைப்பினை ஏற்று விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை வாழ்த்தி உரையாற்றி சிறப்பித்தனர்.

மேற்கூறிய சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக சிறப்புகள் செய்யப்பட்டன. பொன்னாடை சந்தன மாலை நினைவுப்பரிசு வழங்கப்பட்டு முறையாக நமது உறுப்பினர்களால் சிறப்பிக்கப்பட்டனர்.

இன்றைய விழா நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்று தனது தலைமை உரை ஆற்றிவிழாவினை தொடங்கி வைக்க தோழர் வீ. சாமிநாதன் மாவட்ட செயலர் வரவேற்புரை ஆற்றினார். தோழர்கள் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் தோழர் ஏகே தனபாலன் கௌரவ தலைவர் துணைத்தலைவர்கள் தோழர் எம் இருதயராஜ் தோழர் கே சந்தான கோபாலன் ஆகியோர் விழாவினை வாழ்த்தி உரையாற்றினர். இந்த நேரத்தில் அவைக்கு வந்த மதுரை மாவட்ட செயலர் தோழர் வீராசாமி மதுரை மாவட்ட பொருளாளர் சீனிவாசகன் ஆகியோரை வரவேற்று கௌரவிக்கப்பட்டு பொன்னாடை சந்தனமாலை நினைவு பரிசு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். மதுரை தோழர்கள் இருவரும் தங்களது சிறப்பு உரையில் தஞ்சை மாவட்ட சங்கத்தின் சிறப்பினைப் பற்றியும் தஞ்சை மாவட்ட செயலர் தோழர்  சாமிநாதன் சாதனைகள் பற்றியும் சிலாகித்துப் பேசி ஒரு சிறந்த உரையினை ஆற்றி நிறைவு செய்தனர்.

உலக மகளிர் தின விழாவிற்கு தோழியர் S.சந்திரகுமாரி டிஜிஎம் ஓய்வு மற்றும் தோழியர் சீ. பொன்னழகு டிஜிஎம் ஓய்வு ஆகியோர் முறையே தலைமை வகிக்கவும் முன்னிலை வகிக்கவும் தோழியர் ஆர். கோதாவரி வரவேற்புரை ஆற்றினார்.

இன்றைய முக்கிய நிகழ்வான பட்டிமன்றம் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டது.பட்டிமன்ற தலைப்பு பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருப்பது உறவினர்களின் ஊக்கமே மற்றும் சமுதாய மாற்றமே . நடுவராக பணியாற்றிய பிவிகே ஐயா அவர்களின் தீர்ப்பு உறவினர்களின் ஊக்கமே என்ற அணிக்கு சாதகமாக அளித்தது

பட்டிமன்ற நிகழ்வுகள் நிறைவுபெற்ற பின் தஞ்சை பொது மேலாளர் பிஎஸ்என்எல் ஸ்ரீ ஏவி ஸ்ரீ குமார் ஐடிஎஸ் அவர்கள் விழாவினை வாழ்த்தி அருமையான ஒரு உரை நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக மனிதநேய மருத்துவர் திருமதி ஷர்மிளா பேகம் BSMS அரசு மருத்துவர் ஒரத்தநாடு அவர்கள் த்தமருத்துவ முறையினைப் பற்றி சிறப்பானதொரு உரையினை அனைவரும் முழுதும் புரிந்து கொள்ளும்படியான நடையிலே உரையாற்றினார்கள்

தோழர் என் வீரபாண்டியன் முதன்மை ஆலோசகர் தஞ்சை மாவட்ட பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம் மற்றும் தோழியர் லைலா பானு தோழியர் வி.டி. அருட்செல்விஆகியோர் சிறப்பான ஒரு வாழ்த்து உரையினை ஆற்றி அமர்ந்தனர். தோழியர் டி உஷா நன்றி உரையினை நவில விழா இனிதாக நிறைவு பெற்றது.

விழாவின் நிறைவினிலே அனைவருக்கும் தஞ்சை பாரம்பரிய மதிய உணவு அளிக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.
தோழமை வாழ்த்துக்களுடன்,
வீ. சாமிநாதன்,
மாவட்ட செயலர்,   தஞ்சாவூர்.


No comments:

Post a Comment