Tuesday, 23 February 2021

 

சிறப்பு கூட்ட நிகழ்வுகள் தொகுப்பு.

இன்று 23 02 2021 செவ்வாய்க்கிழமை மாலை  மூன்று முப்பது மணிக்கு தஞ்சை தந்தி அலுவலக வளாகத்தில் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம்  25கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் பங்கு பெற்று சிறப்பித்தனர். கூட்டத்தின் முக்கிய ஆய்படு பொருள் வருகின்ற உலக மகளிர் தினத்தை இந்த கொரானா காலத்தில் எப்படி கொண்டாடலாம் என்பது பற்றி கருத்து கேட்பு கூட்டம்.

தோழர் இருதயராஜ் தலைமையேற்க செயலர் சாமிநாதன் முன்னின்று நடத்த மாநில அமைப்புச் செயலர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலை வகித்தார். தோழியர் சாரதா சந்தான கோபாலன் கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் சந்தான கோபாலன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலர் தலைவரின் முன்னுரைக்கு பிறகு உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவிட கோரினார். உறுப்பினர்கள் சந்திரகுமாரி,  மல்லிகா,  சுகுமாரன்,  பத்மினி , லைலா பானூ, செந்தாமரை,  கைலாசம்,  என் பாலகிருஷ்ணன்2,  அய்யனார்,  நடராஜன்,  முகிலன்,  செல்வராஜ்,  சந்தானகோபாலன் ஆகியோர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.  அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து முடிவாக கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

1.    தோழியர்கள் சந்திரகுமாரி, மல்லிகா சுகுமாரன், பத்மினி, லைலா பானு டி உஷா, பொன்னழகு, செந்தாமரைச் செல்வி ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. தோழர் அய்யனார் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2.    சிறப்பு அழைப்பாளராக GM,  BSNL  தஞ்சை அவர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

3.    21.03.2021. மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் மகளிர் தினத்தை கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

4.    மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வுகளை பகல் 10-11 மணிக்குள் நடத்தி பிறகு 11 மணி முதல் ஒரு மணி வரை உலக மகளிர் தினத்தை கொண்டாடுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

5.    முதன்மை விருந்தினராக ஒரு பெண் மருத்துவரை அழைப்பது எனவும் அவரது சிறப்பு உரைக்குப் பிறகு கலந்துரையாடல் செய்திடவும் முடிவு செய்யப்பட்டது.

6.    பகல் 11-12 மணிக்குள் மகளிர் தினத்திற்கான சிறப்பு பட்டிமன்றத்தை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

7.    நன்கொடை கட்டாயமில்லை ஆனால் கொடுப்பவர்களுக்கு தடையும் இல்லை என முடிவு செய்யப்பட்டது.

8.    25-02-2021 அன்று காலை 11மணிக்கு மகளிர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தோழர் சீனு பொருளாளர் நன்றி நவில, கூட்டம் இனிதே முடிவுற்றது. இடையில் அனைவருக்கும் தேனீர் விருந்து வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment