காரைக்குடியில் மேதின
கொடியேற்றம்...
நிகழ்வு-1
AIBSNLPWA சங்கக்கொடியேற்றம்
தலைமை: D.பாண்டித்துரை
கிளைத்தலைவர்
முன்னிலை: K.சுந்தரராஜன்
கிளைச்செயலர்
N.நாகேஸ்வரன்
அவர்களின் முழக்கத்திற்கிடையே தோழியர்
காந்திமதி வெங்கடேசன் அவர்கள் AIBSNLPWA ஓய்வூதிய
சங்கக் கொடியினை ஏற்றிவைத்தார்கள்.
மற்றும் சிவகங்கை , இராமநாதபுரம் , காரைக்குடியில் பொது மேலாளர் அலுவலகம் இரண்டு RSU அலுவலகங்களில் மேதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே கொடி ஏற்றப்பட்டது.
மற்றும் சிவகங்கை , இராமநாதபுரம் , காரைக்குடியில் பொது மேலாளர் அலுவலகம் இரண்டு RSU அலுவலகங்களில் மேதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்வு-2
மேதின
தியாகிகளுக்கு மலர் அஞ்சலி மற்றும் விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண நிதி வழங்கல்.....
தலைமை:
தோழர்.நாகேஷ்வரன்.
முன்னிலை:
V.மாரி
எட்டுமணி
வேலை கேட்டு உயிர்த்தியாகம் செய்த தோழர்களின் நினைவாக கொண்டாடப்படும் மேதின வரலாறு பற்றியும் இந்தியாவில் எட்டுமணி வேலைக்கு வேட்டு வைக்க முயற்சிக்கும் அரசின் நிலைபற்றியும்
பத்து
மாதங்களாக ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம் பெறாத நிலையில் அவர்களின் துயர்துடைக்க அனைவருக்கும் தலா ரூ 2000 வீதம் வழங்க பணியில் இருக்கும் தோழர்கள் மற்றும் பணிநிறைவுபெற்ற தோழர்களிடம் நன்கொடை பெற்றது பற்றியும் நாகேஷ் அவர்களும் மாரி அவர்களும் உரையாற்றினர்.
அதிகத்தொகையை
அள்ளித்தந்த தேவகோட்டை பன்னீர்செல்வம் அவர்கள் கேஷுவல் ஊழியர்களுக்கு நன்கொடை அளித்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து ஓய்வூதியர்கள்
பாண்டித்துரை, P.முருகன், C.முருகன், காந்திமதி, சுதா, சங்கரன், இராஜேந்திரன், நம்புகண்ணன் லால்பகதூர், காதர்பாட்சா, துரைபாண்டியன் ஆகியோர் வந்திருந்த கேஷுவல் தொழிலாளர்களுக்கு நன்கொடை வழங்கி சிறப்பித்தனர்.
தோழர்
முத்துக்கிருஷ்ணன் நன்கொடை தந்தவர்களை பாராட்டிபேசினார்.
கொரானா தீநுண்மீ உலகம் முழுவதும் கலவரத்தை உண்டுபண்ணியபோதும் இதனால் ஒழுக்கம், கூடிவாழ்தல், சுத்தம் பேணுதல், உதவும் மனப்பான்மை, சிக்கனம், சேமிப்பின் அவசியம் போன்றவற்றை கற்றுக்கொடுத்துள்ளது என்றும் பேசினார்.
ஓய்வூதியர்சங்க
காரைக்குடி பொருளாளர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.
66 பேர்
கலந்து கொண்ட சிறப்பான நிகழ்ச்சியாக, ஒப்பந்த
ஊழியர்களுக்கு உதவிசெய்த நிகழ்ச்சியாக
இந்த
மேதினம் அமையப்பெற்றது அனைவருக்கும் மன நிறைவை மனமகிழ்ச்சியை
தந்தது.
மேதின
விழாவினை அரசாங்க விதிமுறைகளுக்குட்பட்டு, தனிநபர் சமூக இடைவெளிவிட்டும், முகக்கவசம் அணிந்தும்
No comments:
Post a Comment