Wednesday, 16 October 2019


சோழர் பூமி தஞ்சையில் தீபாவளி கொண்டாட்டம்.
அன்புப் பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே, போற்றுதலுக்குரிய தோழர்களே, தோழியர்களே, அனைவருக்கும் காலை வணக்கம். இன்று 15 10 2019 மங்களகரமான செவ்வாய்க்கிழமை தஞ்சை மாவட்ட அகில இந்திய BSNL  ஓய்வூதியர் நல சங்கம் தஞ்சை BSNL  உதவும் கரங்கள் இணைந்து நடத்திய தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு.

இன்று காலை அகில இந்திய BSNL ஓய்வூதிய நல சங்க உறுப்பினர்கள் மற்றும் BSNL  உதவும் உள்ளங்கள் உறுப்பினர்கள் கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியரும் மாநில செயலர் தோழர் ஆர்வி தஞ்சை மாவட்ட செயலர் வீ.சாமிநாதன் மாநில அமைப்புச் செயலர் தோழர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தோழர் பட்டுக்கோட்டை சிவி தங்கையன்  மற்றும் ஆர்வமிக்க முன்னணி தோழர்களும் தோழியர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு தீபாவளி விழாவினை பண்டிகைக்கு முன்பாகவே( இன் அட்வான்ஸ்) சிறப்பாக கீழ்க்கண்ட இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

காலையில் அன்னை சத்யா மகளிர் காப்பகம் அரசு கண்பார்வையற்றோர் பள்ளி காதுகேளாதோர் பள்ளி மற்றும் மனநலம் குன்றியோர் காப்பகம் அன்பாலயம் முதலிய இடங்களுக்கு சென்று அங்குள்ள உறுப்பினர்களுடன் கிட்டதட்ட 350 மேற்பட்ட மாணவ மாணவிகள் காது கேளாதோர் கண்பார்வையற்றோர் மனநலம் குன்றியோர் ஆகிய நமது உடன்பிறவா குடும்ப உறுப்பினர்களுக்கு தீபாவளி ஆடைகள் தீபாவளி இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி அனைத்து இடத்திலும் அவர்களிடம் ஊடாடி அளவளாவி மிகுந்த மகிழ்ச்சியுடன் காலை நிகழ்ச்சிகளை ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மாலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுக்கா கடுவெளி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆதரவற்றோர் காப்பகத்திற்கு நமது தஞ்சை மாவட்ட முதன்மை பொது மேலாளர் ஸ்ரீ C.வினோத் ITS, நமது மாநில செயலர் தோழர் R.வெங்கடாசலம், தோழர் மதுரை ராஜேந்திரன் தலைவர், தோழர் வீ. சாமிநாதன் மாவட்ட செயலர், தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர், மற்றும் ஓய்வுபெற்ற துணைப் பொது மேலாளர்கள் கோட்ட அதிகாரிகள் துணை கோட்ட அதிகாரிகள் கணக்கியல் அதிகாரிகள் மற்றும் ஆர்வமிக்க முன்னணி தோழர்களும் தோழியர்களும் கிட்டத்தட்ட முப்பதற்கும்  மேற்பட்ட  ஆர்வலர்கள் கலந்துகொண்டு தீபாவளி பண்டிகையை அந்த காப்பகத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் காப்பகத்தில் நிரந்தரமாக தங்கியிருக்கும் முதியோர்கள் ஆதரவற்ற மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு தீபாவளி பண்டிகை நிகழ்வுகளை இனிதாக நம்முடைய உறுப்பினர்களுடன் கலந்து உரையாடி சிறப்பான ஆனந்தமான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் தஞ்சை மாவட்ட சங்கத்தினால் கடந்த இருபது வருடங்களாய் போற்றத்தக்க வகையில் பாராட்டும் வகையிலும் நடைபெற்று வருகிறது என்பது விசேஷமான அம்சமாகும். முதலாவதாக நமது முதன்மை பொது மேலாளர் மற்றும் மாநில செயலர் சிறந்ததொரு உரையாற்றி நிகழ்வுகளுக்கு சிறப்பு சேர்த்தனர். அடுத்து நமது பொது மேலாளர் மாநில செயலர் மற்றும் அனைத்து தோழர்களும் தோழியரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆதரவு அற்றோர் காப்பக தலைவர் அவர்களால் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அடுத்து முறையாக காப்பக தலைவர் மற்றும் நிர்வாகிகள் நமது உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அடுத்து அங்கு உள்ள நானூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளி புதிய ஆடைகள் இனிப்பு கார வகைகள் மற்றும் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகள் நமது உறுப்பினர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அப்பொழுது நிகழ்வுற்ற காட்சிகள் ஆனந்தம் ஆனவை. அபூர்வமானவை. வாழ்க்கையிலே ஒவ்வொருவரும்அனுபவிக்க பட வேண்டிய கண்கொள்ளாக் காட்சிகள். ஆனந்தம் ஆனந்தமே. இந்த நிகழ்வுகள் கடந்த இருபது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பதோடு அல்லாமல் இன்னும் வரும் காலங்களிலும் சிறப்பாக நடைபெற ஆண்டவனின் அருளும் உங்களது ஏகோபித்த ஆதரவும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இனி நடைபெற இருப்பவை நல்லதாக அமைய பிரார்த்தனை செய்கிறோம்.
வாழ்க, வளர்க அகில இந்திய BSNL  ஓய்வூதியர் நல சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட BSNL  உதவும் உள்ளங்கள் அமைப்பு.
நன்றி, வணக்கம்.

No comments:

Post a Comment