Sunday, 18 March 2018

அன்புள்ள தோழர்களே !
ஒரிஸ்ஸா தோழர்கள் நமது அகில இந்திய மாநாட்டினை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் நடத்தலாம் என்று அறிவித்துள்ளனர். சென்ற இதழ் பென்ஷனர் பத்திரிக்காவில் நம் CHQ தலைவர் தோழர் P.S. ராமன்குட்டி கூறியுள்ளபடி ஒரு சிறிய மாநிலமான ஒரிஸ்ஸா மிக குறைந்த அளவு எண்ணிக்கை உள்ள நம் உறுப்பினர்கள் , இருந்த போதிலும் மிக துணிச்சலுடன் மிகவும் சாமர்த்தியமாக அகில இந்திய மாநாட்டினை கோவில் நகரமான பூரியில்  நடத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. இந்த பூரி மாநாடு புகழ் வாய்ந்த பெரிய நிறுவனமான நம் AIBSNLPWA வெற்றி பயணத்தில்   ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

இந்த அ .இ மாநாடு ஒரு வெற்றி மாநாடாக நடைபெற நாம் எல்லோரும் ஒரிசா தோழர்களுக்கு துணை நிற்க கடமை பட்டுள்ளோம். இது மிகவும் சாதாரணமாக நம்மால் எளிதாக செய்ய இயலும். ஒவ்வொரு சங்கத்தினரும் ஆயுள் கால உறுப்பினராக இருந்தாலும் சரி , ஆண்டு சந்தா செலுத்தும் உறுப்பினராக இருந்தாலும் சரி , ஒவ்வொரு உறுப்பினரும் ரூ 50/- ஐ மாநாட்டு நிதியாக உடனடியாக அளித்தால் போதும் . கிளை / மாவட்ட செயலர்கள் அந்த நிதியினை பெற்று CHQ  கணக்கில் சேர்த்து விடவும். CHQ இந்த நிதியை தனியாக வைத்துக்கொள்ளும். மாவட்ட நிர்வாகங்கள் தங்கள் மாவட்ட நிதியிலிருந்து CHQ விற்கு ஏப்ரல் மாதம் 30 தேதிக்குள் அனுப்பிவிட்டு பிறகு உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் . 
அவ்வாறு எல்லா மாவட்டங்களிடமிருந்து பெறப்படும் நிதியை , ஏப்ரல் மாதம் ஏற்படுத்தப்படும் வரவேற்பு கமிட்டியிடம் CHQ அளிக்கும் . வரவேற்பு கமிட்டி ஏற்படுத்திய பின் மாநாட்டிற்கான பணிகள் மிக துரிதமாக நடைபெறும்.
மாவட்ட நிர்வாகிகளே தயவு செய்து அடுத்த அறிவிப்பிற்கு காத்திராமல் , மாவட்ட நிதியிலிருந்து CHQ  நிதிக்கு உடனடியாக தொகை அனுப்பி விட்டு தகவலை உரிய விபரங்களுடன் CHQ பொருளாளர் தோழர் விட்டோபன் அவர்களுக்கு அனுப்பவும். அந்த தகவல்களை தொகைக்கான பட்டியல்களை இனிவரும் பென்சனர் பத்திரிக்கையில் வெளியிடப்படும். இந்த முடிவுகள் சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய காரிய கமிட்டியில் ( CWC ) எடுக்கப்பட்டது.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
G .நடராஜன் 
பொது செயலர்,
AIBSNLPWA .





No comments:

Post a Comment