Monday 19 June 2017

வேலூர் மாவட்ட AIBSNLPWA சங்கத்தின் முன்னணி தோழரும் வேலூர் மாவட்ட AIBSNLPWA சங்கத்தின் இணை  செயலாளருமான தோழர் R . நடராசன் II  ( வயது 75 )அவர்கள் 18-06-2017 அன்று மாலை இயற்கை எய்தினார் என்கிற செய்தியினை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் 
சங்கத்தின் அத்துணை செயல்பாடுகளிலும் மிக மிக துடிப்புடன் ஈடுபட்டு எல்லா வழிகளிலும் மிகவும் உறுதுணையாக இருந்து வந்த அவர் மறைவு பேரிழப்பாகும் .அவர்  பிரிவை எண்ணி வாடும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் அவர் சங்கத்திற்கு செய்துள்ள சேவைகளையும் அவரது நல் மனித பண்புகளையும்   பாராட்டி அவரது மறைவிற்கு  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை 20-06-2017 காலை 1030 க்கு துவங்கும்.
அவரது ஆன்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகிறோம். 
முகவரி  திருப்பூர் குமரன் இரண்டாம் தெரு ,சலவன் பேட்டை , வேலூர்.
கைப்பேசி எண் : 94893 29800 

1 comment:

  1. LET US PRAY FOR HIS SOUL REST IN PEACE

    R.PERUMAL. AIBSNLPWA.COIMBATORE

    ReplyDelete