A Link is given, by clicking with your mouse pointer, the list would open and spread.
A Link is given, by clicking with your mouse pointer, the list would open and spread.
For Kind attention of CWC members And Delegates,
மாவட்ட
செயலர்கள் கவனத்திற்கு.,
வணக்கம்.
நமது தமிழ் மாநில மாநாடு, 04-10-2025 மற்றும் 05-10-2025 தேதிகளில் வேலூரில் நடைபெற இருக்கிறது. மாநாட்டில் பங்கு பெரும் சார்பாளர்கள் தேர்வு, மாவட்ட பொதுக்குழு, கிளை பொதுக்குழு கூட்டங்கள் நிகழ்த்தி, தேர்வு செய்ய வேண்டும். நமது சங்க அமைப்பு விதி எண் 8 a படி, 31-03-2025 அன்று உள்ள ஆயுள் சந்தா உறுப்பினர் எண்ணிக்கையில், தலா 50 உறுப்பினருக்கு, ஒரு சார்பாளர் வீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். மாவட்ட வாரியாக, எத்தனை சார்பாளர்கள் உரியவர்கள் என்பதை பட்டியலில் கொடுத்துள்ளோம். மாநில நிர்வாகிகள், CHQ நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில மாநாட்டிற்கு நேரடியாக வருவதற்கு உரிமை உரியவர்கள். சார்பாளர்கள் தேர்வு முடிந்தவுடன்,பெயர் பட்டியலை மாவட்ட புத்தகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். மாநில சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
2.அகில
இந்திய மாநாடு :- அகில இந்திய மாநாடு
2025 நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் கேரள மாநிலம் கொச்சியில்
நடைபெற உள்ளது. அதற்கான சார்பாளர்கள், 100 ஆயுள் உறுப்பினருக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்ய வேண்டும். அகில இந்திய நிர்வாகிகள்,
நேரடியாக வர உரிமையுள்ளவர்கள். மற்றபடி, மாவட்ட
செயலாளர் உட்பட, அனைவரும் சார்பாளராக தான் வரவேண்டும். முறைப்படி
சார்பாளர்களை
தேர்வு செய்து, மாநில சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
நன்றி.