Monday 10 July 2023



அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கம் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கான சங்க அலுவலக திறப்பு விழா  09.07.23  ஞாயிற்றுக்கிழமை பாலாஜி மேன்சன்  அறை எண் 4 தோழர்.PKB அவர்களால் ரிப்பன்  வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

மாவட்டத் தலைவர் தோழர் கேபிஆர் தலைமையில் திறப்பு விழா கூட்டம் துவக்கப்பட்டது. செயலர் தோழர் எம் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணை செயலாளர் தோழர் பட்டாபிராமன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம்,  தோழர் பி ராஜா  தோழியர் லட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் P.வேணுகோபால் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் கோவிந்தராஜ் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் பலராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேட்டூர் கிளைச் செயலாளர் மணிபாலன், வேலூர் கிளை செயலாளர் ஆறுமுகம், திருச்செங்கோடு உதவி செயலர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் கிழக்கு மாவட்ட உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பில் பரிசாக சுவர் கடிகாரம் ஒன்றை வழங்கினார்கள். தோழர் அஸ்லாம் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 மேலும் சங்க அலுவலக திறப்பு விழா கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மேலும் வாட்ஸ் அப் மூலம் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,

தோழர் கே பி ஆர் தலைவர்,

தோழர் எம் கணேசன் , செயலர் சேலம் கிழக்கு மாவட்டம்.














No comments:

Post a Comment