Wednesday 18 November 2020

 

தோழர்களே! VRS-2019ல் சென்ற தோழர்கள் சில பேர்களுக்கு (Super annuation retirement on April, May & June'20) கம்யூடேசன் பணம் வழங்கப்படாமல் இருந்தது. இந்த பிரச்சனையை தீர்பதற்கு நாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். ஆனாலும் காலதாமதம் ஏற்பட்டது. நாம் மாநில சங்கத்தை அணுகி பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்று கூறிய பொழுது மாநில செயலாளர் தோழர். R.V அவர்கள் பெருமுயற்சி எடுத்து செயல் பட்ட காரணத்தால் இன்று அனைத்து தோழர்களுக்கும் கம்யூடேசன் பணம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.  இதற்கு தேவையான நேரத்தில் கேட்ட ஆவணங்களை CCA அலுவலகத்திற்கு அனுப்பி உதவிட்ட AO (Drawal) S.Saravanan, JAO (Drawal) Vinayagamoorthy மற்றும் OS Karthick அவர்களுக்கும், இந்த கரோனா இடர்பாடுகளிலும் CCA அலுவலகம் சென்று பணப் பட்டுவாடாவுக்காக பெருமுயற்சி எடுத்திட்ட மாநில செயலாளர் அவர்களுக்கும் குடந்தை மாவட்ட சங்கத்திற்கும் குடந்தை AIBSNLPWA மாவட்டச் சங்கம் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

ஜெயராமன்.R
மாவட்ட அமைப்புச் செயலாளர்,
AIBSNLPWA,
கும்பகோணம் .

 

7 வது சம்பள கமிஷனின் உத்திரவு படி DOT ல் 6500-200-10500 ஸ்கேலில்  பணிபரிந்து ஓய்வு பெற்ற தோழர்களுக்கு Pension Revision செய்யப்பட்டது. அதன்படி நமது மாவட்டத்தில் 2 தோழர்கள் மட்டுமே இருந்தனர். 1. தோழர். N.அனந்தன், 2. தோழர். N.நாராயணசாமி. இருவருக்கும் பென்ஷன் ரிவிஷன்  செய்யப்பட்டு  இன்று DOTஆல்  உத்திரவு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு தோழர்களுக்கும் பென்ஷனில் கிட்டத்தட்ட ரூபாய் 700 வரை உயர்வு கிடைக்கும் அரியர்ஸ் உடன். இதைப் பெற்று தருவதற்கு நமது மாநில செயலாளர் தோழர். R.V. அவர்களின் பணி, விடாமுயற்சிதான் இதற்குக் காரணம். தோழர். R.V. அவர்களுக்கு இரண்டு தோழர்களும் தங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர். குடந்தை மாவட்டச் சங்கம் மாநில செயலரின் பணிக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

மா..செயலாளர்,
,AIBSNLPWA,
கும்பகோணம்.



No comments:

Post a Comment