Sunday 14 April 2019


 13-04-2019 அன்று காலை 10-30 மணியளவில் திரு.D.பாண்டித்துரை தலைமையில் பொதுமேலாளர் அலுவகத்தில் நடைபெற்றது. 
ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு துவக்கநாளில்
அந்நாளில் மரணமுற்ற தியாகிகளின் நினைவேந்தலுடன் காஷ்மீரில் தீவிரவாதிகளால் படுகொலைக்கு ஆளான 40 இந்திய எல்லை பாதுகாப்பு வீரர்களின் மரணத்திற்கும், கிளையின் மூத்ததோழர் வைரவன் இறப்பிற்கும் ஆபரேட்டர் கதிரேசன் அவர்களின் மனைவி மறைவிற்கும் தேவகோட்டை AL.சுப்பையா அவர்களின் மகன் மறைவிற்கும் ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிளைச்செயலர் சுந்தரராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கூட்டத்தில் 15 மகளிர் உட்பட 66 பேர் கலந்து கொண்டனர்.
மாவட்டத் தலைவர் P.முருகன் அவர்களும் மாவட்டச் செயலர் N.நாகேஷ்வரன் அவர்களும் காரைக்குடி கிளை உறுப்பினர்களின் தீர்க்கப் பட்ட பிரச்னைகள் பற்றியும் தீர்க்கப்படாமல் தேங்கியுள்ள பிரச்னைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். 
மருத்துவப்படி மருத்துவபில்கள் பட்டுவாடா பற்றியும் கும்பகோணத்தில் நடந்துமுடிந்த மாநில செயற்குழு முடிவுகள் பற்றியும்  தெரிவித்தனர்.
 2018 ஏப்ரல் மாதத்திலிருந்து 2019 மார்ச் மாதம் வரை பணிநிறைவுபெற்ற தோழர்கள் Without Voucher-ல் மருத்துவப்படி பெறுவதற்கு உரிய படிவங்களை தர செயலர் வேண்டுகோள் விடுத்தார்.
 NFTE-ன் மாவட்டச்செயலரும் ஓய்வூதியர் கணக்கதிகாரியுமான V.மாரி அவர்கள் VRS, BSNL இன்றையநிலை ஓய்வூதியர் பிரச்னைகளை தீர்த்த தனது அனுபவங்கள் பற்றி குறிப்பிட்டார்AO (Pension) பதவி தனக்கு கிடைத்த வரமென்றும் மூத்த தோழர்களுக்கு
சேவைசெய்ய இந்தப்பதவி உதவிகரமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
இணைச்செயலர் S.துரைபாண்டியன் நன்றிகூறி கூட்டத்தை முடித்துவைத்தார்.
பங்குனி-சித்திரை மாதத்து வெயிலை பொருட் படுத்தாமல் கூட்டத்தில் கலந்து கொண்டோர் அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள்.
அதுமட்டுமல்லாமல் மருத்துவப்படி பெற்றோர் மனமுவந்து கிளைவளர்ச்சிக்கு நன்கொடை தந்தது பெரிதும் பாராட்டுக்குரியது.


No comments:

Post a Comment